ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

kavithai

தவிக்கின்றேன்

மறந்துவிடு என்கிறாய் எதை மறப்பது
எப்படி மறப்பதென்று தெரியாமல்
தவிக்கின்றேன் நான் ஜன்னல்
வழியாக நான் போவதை
மறைந்திருந்து பார்ப்பாயே அதை
மறப்பதா ……..

தாமதமாய் வகுப்பறையில் நுழையும் போது உன்
ஒற்றைப்பார்வையால் ரசிப்பாயே
அதை மறப்பதா ……….

உன் வீட்டுத்தோட்டத்தில் பூப்பறிக்க வரும்
சாக்கில் என் மனதை பறித்தாயே
அதை மறப்பதா ……

எழுத்தே வராதஇந்த கைகளில் கவிதைகள் எழுத
கற்றுக் கொடுத்ததே உன் கண்கள்
அதை மறப்பதா ……..

சொல் பெண்ணே எதை மறப்பது எப்படி மறப்பது
கல்லாய் இருந்த என்னை சிற்பமாய்
செதுக்கினாய் உன் காதல்
மொழிகளால் செதுக்கிய சிற்பத்தை
நீயே உடைக்க நினைப்பது என்ன
நியாயம் பெண்ணே உன்னை
மறப்பதென்பது இயலாத ஒன்று
மரிக்கின்றேன் உன்னையும் உன்
காதலையும் சுமந்து கொண்டு
மீண்டும் பிறப்பெடுப்பேன் உன்னை
அடைவதற்கு இன்னொரு ஜென்மம்
இருக்குமென்றால் ………
யுவா